Enable Javscript for better performance
இஸ்லாமியரால் கட்டப்பட்ட முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்: முதல்வர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    இஸ்லாமியரால் கட்டப்பட்ட முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்: முதல்வர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 23rd June 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் இஸ்லாமியரால் கட்டப்பட்ட முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    புதுச்சேரி சுப்பையா சாலையில் ரயில் நிலையம் அருகே கெளஸ் எனும் இஸ்லாமியரால் கட்டப்பட்டு, அவரது சந்ததியினர் பூஜை செய்து வரும், பிரசித்தி பெற்ற கெளஸ் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கெளசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின்  ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ரஜத பந்தன மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. 
    முன்னதாக, கடந்த ஜூன் 
    17-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் யாக வேள்விகள் தொடங்கி நடைபெற்று வந்தன. 
    வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, கோ பூஜை,  சூரிய பூஜை,  துவாரக பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டு,  காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம்,  கடம் புறப்பாடு,  காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.
    கும்பாபிஷேக விழாவை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ஆம் பட்டம் குரு மகாசன்னிதானம் ஸ்ரீ மத் சிவஞான பாலய சுவாமிகள் முன்னின்று நடத்தினார்.  
    முதலில், விமானத்துக்கும் பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  விழாவில், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி,  அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம்,  மு.கந்தசாமி,  அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன்,  இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   விழா ஏற்பாடுகளை ஆலய பரிபாலகர் காதர், ஆலய பிரதான அர்ச்சகர்கள் ஞானசேகர சிவாச்சாரியார், ராஜேஷ்குமார் சிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai