Enable Javscript for better performance
மடிப்பு நுண்ணோக்கியை உருவாக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மடிப்பு நுண்ணோக்கியை உருவாக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

    By DIN  |   Published on : 23rd June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்கள், காகித மடிப்பு நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளனர்.
    நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஜப்பான் காகித  மடிப்புக் கலை வடிவிலான "மைக்ரோஸ்கோப்' எனும் நுண்ணோக்கியை மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது.  
    தேசிய அளவில் அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் பள்ளிகளை மத்திய உயிரி தொழில் நுட்பத் துறை தேர்ந்தெடுத்து, அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தில்லியில் மடிப்பு நுண்ணோக்கி பற்றிய பயிற்சியும் வழிகாட்டுதல்களையும் வழங்கியது. 
    புதுச்சேரி காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி  அரசு உயர் நிலைப்பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கி குறித்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை  நடைபெற்றது. 
    இதில், புதுவை அறிவியல் இயக்கச் செயலர் அருண் நாகலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சர்வதேச மற்றும் இந்திய அளவில் மடிப்பு நுண்ணோக்கி, அதன் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் விதம் பற்றி நழுவுப் பட காட்சிகளுடன் விளக்கமளித்தார்.
    அவர் பேசும்போது,  இந்த மடிப்பு நுண்ணோக்கி,  மனு பிரகாஷ் எனும் இந்தியரால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.  இது மாணவர்கள் எளிதில் கையாளக் கூடிய வகையில் குறைந்த எடையுடன் எண்ணற்ற  அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.  
    இதனை மருத்துவமனை மற்றும் பள்ளி ஆய்வகங்களில் பயன்படுத்தலாம். இது ஆய்வக நுண்ணோக்கியை விட 100 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் திறனுடையது. மேலும், இதன் பிம்பத்தை செல்லிடப்பேசி உதவியுடன் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் தனித்துவமாகப் பகிரலாம்,  உரையாடலாம்  என்றார்.
    10 கிராம் எடை மட்டுமே உள்ள இந்த மடிப்பு நுண்ணோக்கிகளை ஒரிகாமி செயல்பாடு மூலம் மாணவர்கள் செய்யும்  வழிமுறைகள் குறித்து ஆசிரியர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார்.  மாணவர்கள் உருவாக்கிய இந்த மடிப்பு நுண்ணோக்கிகள் மூலம் இலை,  பூ,  பூச்சி, தோல் போன்றவற்றை மாணவர்கள் கண்டுகளித்து வியப்படைந்தனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி  தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர்  சுப்ரமணியன் வரவேற்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai