Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி விசிக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி விசிக ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 23rd June 2018 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூடக் கோரி புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள்  அமுதவன், தமிழ்மாறன், செல்வ.நந்தன், அகன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த வழக்கை, மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், 13 பேரை சுட  காரணமாக இருந்த தமிழக காவல் துறை, அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தாமரைசெல்வன், பொதினிவளவன், முன்னவன், ஆதவன், சுடர்வளவன், லட்சுமி,  எழில்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai