Enable Javscript for better performance
அரசுக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குளம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குளம்

    By  புதுச்சேரி,  |   Published on : 24th June 2018 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் கலை, அறிவியல் கல்லூரியில் உலக யோகா தின விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு குளம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
     கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு கல்லூரி சுற்றுச் சுவர்களில் மாணவர்கள் வரைந்துள்ள ஓவியங்களை பார்வையிட்டு, மழைநீர் சேகரிப்புக்காக கல்லூரி வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பெற்ற குளத்தைத் திறந்து வைத்தார்.
     பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். மேலும், கல்லூரி வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பழத் தோட்டத்தையும் பார்வையிட்டார். பின்னர், மரங்களின் சருகுகளை கொண்டு உரம் தயாரிக்கும் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
     அதன் பின்னர், கல்லூரி கலையரங்கில் யோகா பயிற்சியை அமைச்சர் கமலக்கண்ணன் தொடக்கி வைத்துப் பேசுகையில், யோகா பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு புத்தெழுச்சியையும் தருகிறது. பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. அப்பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்றார்.
     தமிழ்த் துறைத் தலைவர் இளங்கோ நோக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராம்பிரபு, வேல்ராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கண்ணன், கோவலன், தேசிய மாணவர் படை பொறுப்பாளர்கள் சங்கரன், தீபக் உச்சம்பள்ளி, இளநிலை கணக்கு அதிகாரி ரவி, நூலகர் மணி மற்றும் கல்லூரி அலுவலர்கள், என்எஸ்எஸ்,
     என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai