Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கு: எதிரியின் கடவுச்சீட்டுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கு: எதிரியின் கடவுச்சீட்டுகள் பறிமுதல்

    By  புதுச்சேரி,  |   Published on : 24th June 2018 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் பண மோசடி வழக்கில் கைதான எதிரி சத்யாவின் கடவுச் சீட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் பொதுமக்களின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணை திருடி, பின்னர் போலி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதுவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 12 எதிரிகளை கைது செய்துள்ளனர்.
     இதில் முக்கிய எதிரியான சந்துருஜியை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
     இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்துருஜி தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
     இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கள்கிழமை வரவுள்ளது.
     இதனிடையே சத்யா பல கடவுச்சீட்டுகளின் நகல்களை வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai