Enable Javscript for better performance
பாண்லே பாலகத்தை உடைத்து பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பாண்லே பாலகத்தை உடைத்து பொருள்கள் திருட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 24th June 2018 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே பாண்லே பாலகத்தை உடைத்து அங்கிருந்த பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     புதுச்சேரி மறைமலையடிகள் சாலை சுதேசி பஞ்சாலை அருகே பாண்லே பாலகம் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை 2-ஆவது ஷிப்ட் பணியில் இருந்த ஊழியர் வனிதா இரவு பணியை முடித்துவிட்டு பாண்லே பாலக கதவை பூட்டிவிட்டு வெளிப்புற கதவுக்கும் பூட்டு போட்டுவிட்டு சென்றுள்ளார்.
     வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பணிக்கு வந்த வனிதா வெளிப்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, பாண்லே பாலக கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நெய், பால்பேடா, பாதாம் தூள், குல்பி ஐஸ்கிரீம், பால், தயிர் உள்ளிட்ட பொருள்களை திருடு போயிருந்தன.
     வசூல் பணம் ரூ.14 ஆயிரத்தை பாதுகாப்பு கருதி வனிதா வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதால் அந்தப் பணம் தப்பியது. மர்ம நபர்கள் பாண்லே பாலக முன்புற மதில்சுவர் வழியாக ஏறி பின்புறம் சென்று பாலக வளாகத்துக்குள் புகுந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிச் சென்றுள்ளனர்.
     இது குறித்து வனிதா அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், திருடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai