Enable Javscript for better performance
புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்: முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்: முதல்வர்

    By  புதுச்சேரி,  |   Published on : 24th June 2018 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகள் இன்னும் 15 நாள்களில் தொடங்கும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
     புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
     புதுவை மாநிலத்தில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், செவிலியம், பொறியியல், கலை, அறிவியல் என படித்துவிட்டுஆண்டுதோறும் 9 ஆயிரம் பேர் வெளியே வருகின்றனர்.
     அனைவருக்கும் ஒரே நேரத்தில் அரசுவேலை வாய்ப்பை அளிக்க இயலாது. புதுவை மாநிலத்தில் 30 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
     புதிதாக எந்தந்த இடங்கள் காலியாக உள்ளதோ அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
     காக்னேசன் என்ற நிறுவனம் புதுவை மாநிலத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை 200 பொறியியல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை அளிக்கும் முகாமை நடத்த புதுவை அரசை அணுகியது. அதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இந்த முகாம் விரைவில் தொடங்கி தொடர்ந்து நடத்தப்படும்.
     மேலும், சென்னையில் உள்ள ராமானுஜம் சிட்டி என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் எங்களை சந்தித்துப் பேசினார்.
     அப்போது, புதுவை மாநிலத்தில் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க இசைவு கொடுத்துள்ளார். அதற்குத் தேவையான நிலத்தை வழங்குவதாக கூறியுள்ளேன்.
     இதன் மூலம் புதுவையில் பொறியியல் படித்த 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
     இதற்காக மேட்டுப்பாளையத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை இன்னும் 15 நாள்களில் மேற்கொள்ள உள்ளதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர் என்றார் முதல்வர் நாராயணசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai