Enable Javscript for better performance
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அதிமுக கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்துக் கட்டண உயர்வுக்கு அதிமுக கண்டனம்

    By  புதுச்சேரி,  |   Published on : 24th June 2018 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
     இது குறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     புதுவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டம் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். இதற்காக, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட
     எம்எல்ஏக்களின் குழு, கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளதா?.
     ஏற்கெனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
     சட்டப்பேரவையை கூட்ட அறிவிப்பு வெளியான நிலையில் அவசர, அவசரமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? பேருந்துக் கட்டண உயர்வு குறித்து சட்டப்பேரவையில் விவாதித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுக்கு சட்டப்பேரவை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையா?.
     இந்த பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியில் இருந்தாலும் தவறுகளை தட்டிக்கேட்போம் என்று கூறி வரும் திமுகவினர் இந்தக் கட்டண உயர்வை வரவேற்கிறார்களா?
     நிதிநிலை அறிக்கையிலும், அதற்குப் பிறகும் இன்னும் பல வரி திணிப்பும், புதிய வரிகளும் வரவுள்ளன. இதற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai