Enable Javscript for better performance
மு.க.ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மு.க.ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

    By  புதுச்சேரி,  |   Published on : 24th June 2018 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
     நாமக்கல்லில் தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்ததை கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
     இந்த நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமையில் சாரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
     அதேபோல, புதுவை வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். திமுகவினரின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai