ஏடிஎம் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நூதனப் போராட்டம்
By DIN | Published on : 25th June 2018 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஏடிஎம் பண மோசடி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி, புதுச்சேரியில் சமூக அமைப்பாளர்கள் அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில், ஏடிஎம் பண மோசடி வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், முக்கிய எதிரியான சந்துருஜியை 3 மாதங்களுக்கு மேலாக கைது செய்ய முடியவில்லை. ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முகநூலில் விடியோ பதிவை வெளியிட்ட சந்துருஜியை போலீஸார் நெருங்க முடியாததைக் கண்டித்தும், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தியும் புதுச்சேரி புஸ்ஸி வீதியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் சமூக அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டன. பின்னர், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு அலைகள் இயக்க அமைப்பாளர் பாரதி தலைமை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோகுல்காந்திநாத் முன்னிலை வகித்தார். பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.