Enable Javscript for better performance
"கானல் நீர்' நூல் வெளியீட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல் நிலைப் பள்ளியின் விரிவுரையாளர் பூபதி பெரியசாமி எழுதியுள்ள மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான "கானல் நீர்' நூலின் வெளியீட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மரபுமாமணி நெய்தல் நாடன் வரவேற்றார்.  பாக்கியம் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
    புதுவை மத்தியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா. இரவிக்குமார் தலைமை வகித்தார். கல்வித் துறையின் இணை இயக்குநர் குப்புசாமி கலந்து கொண்டு நூலை வெளியிட,  கவிஞர் தேவகி ஆனந்த், காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயகுருநாதன்,  முருகானந்தம் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
    புதுவை பாரதி இலக்கிய இதழ் ஆசிரியர் பாரதிவாணர் சிவா நூல் மதிப்புரை செய்தார். பேராசிரியர் கலைமாமணி ராஜன்,  துணை முதல்வர் தனசெல்வன்நேரு,  புதுவைத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் கவிஞர் சீனு மோகன்தாஸ், புதுவை நகைச்சுவை மன்றத்தலைவர் குப்புசாமி, விவேகானந்தா மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் பூபதி ஏற்புரை வழங்கினார்.  வளையாபதி பெரியசாமி நன்றி தெரிவித்தார்.  தேசிய குழந்தை விருதாளர் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை,  பாரதிராஜா, மோகன்ராஜ்,  கவிபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai