Enable Javscript for better performance
சாதி ஒழிப்புக்கான அரசியலை  விரைவுபடுத்துவது அவசியம்: திரைப்பட இயக்குநர் கோபிநயினார்- Dinamani

சுடச்சுட

    

    சாதி ஒழிப்புக்கான அரசியலை  விரைவுபடுத்துவது அவசியம்: திரைப்பட இயக்குநர் கோபிநயினார்

    By DIN  |   Published on : 25th June 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாதி ஒழிப்புக்கான அரசியலை விரைவுபடுத்துவது அவசியம் என்று திரைப்பட இயக்குநர் கோபிநயினார் வலியுறுத்தினார்.
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 
    14-ஆவது மாநில மாநாட்டில்,  170 ஆவணப்படங்கள் அடங்கிய டிவிடி மற்றும் தமுஎகசவின் யூடியூப் பாடல்கள் அடங்கிய சிடியை வெளியிட்டு திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பேசிதாவது: 
    சாதி ஒழிப்பு என்பது குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பேசுவது இல்லை.  அவ்வாறு பேசினால் அது, பகையாக மாறும். ஆனால், சாதி ஒழிப்பு அரசியல் என்பது அவ்வாறு இல்லை.  சாதி ஒழிப்புப் போராட்டம் என்பது மிக நுட்பமாக உள்ளது.  என் மீது வன்முறையை திணிக்கும் மனிதனை என்னால் அடிக்க முடியாது.  ஏனெனில், அந்த அடி சாதியின் மீது விழவில்லை.  அந்த மனிதன் மீது விழுகிறது.  சாதி என்ற ஒழிப்புக்கான அரசியலை நுட்பமாக கையாள வேண்டிய தேவையும் உள்ளது. சாதி ஒழிப்பு என்பது பொது சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலமாகத்தான் ஒழிக்க முடியும். இதுபோன்று ஒருங்கிணைப்பதற்கு பெரியார் முதல் வாயிலாக உள்ளார்.  அவ்வாறு வருபவர்கள் அம்பேத்கரிடம் வந்து முடிவடைகின்றனர். 
    அம்பேத்கரை மறுக்கவே பெரியாரை மறுக்கின்ற வேலையை தொடங்குகின்றனர்.  இதனைத் தெளிவாக  கண்டுபிடித்ததால்தான் பெரியார்,  அம்பேத்கர்,  லெனினை ஒரே மேடையில் காட்சிப்படுத்த முடிகிறது.  இந்த அரசியல் சாதி ஒழிப்புக்கான மிக முக்கியமான, நுட்பமான அரசியலாக கருதுகிறேன்.  சாதி ஒழிப்புக்கான அரசியலை கையில் எடுப்பதற்கும்,  விரைவுபடுத்துவதற்குமான தேவைகளை மிகவும் முக்கியமாகக் கருதுகிறேன். அந்த வேலைகளை கலைகள்,  இயக்கங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai