Enable Javscript for better performance
தனியார் நிறுவனங்களில் நீர் பயன்பாட்டை கண்காணிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவனங்களில் நீர் பயன்பாட்டை கண்காணிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 25th June 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ள தனியார் நிறுவனங்களில் நீர் பயன்பாட்டை 3 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
    ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் நேரில் சென்று கள ஆய்வு செய்து வருகிறார். அவர் தனது168-ஆவது களப் பயணமாக அரசுப் பேருந்தில் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்.
    அங்கு மழைநீர் சேகரிப்புத் தொடர்பாக எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.  அங்கு மருத்துவமனை கல்லூரி பகுதியில் நிலத்தடி நீரின் அளவு குறித்தும், பயன்படுத்தப்பட்ட நீர் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதுதொடர்பாக சரியான கணக்கீடு இல்லை.
    இதையடுத்து, அரசு நிர்ணயித்த அளவை மீறி  நிலத்தடி நீரை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  தனியார் நிறுவனங்களின் நீர் பயன்பாட்டை 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்
     நெட்டப்பாக்கத்தில் உள்ள  எம்ஆர்எப் தனியார் டயர் தொழிற்சாலைக்குச் சென்று, அங்கும் நீர் பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்டார்.  அங்கு மழைநீர் சேகரிப்பு உள்பட அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டிருந்தன. 
    இதையடுத்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியார் நிறுவனங்களில் நீர் பயன்பாடு குறித்து கணக்கீடு செய்வது மிகவும் அவசியம்.  
    இந்த நீர் கணக்கீடு செய்யும் முறை தொடர்பாக புதுவை  பல்கலைக்கழகம்,  புதுவை பொறியியல் கல்லூரிகள் ஆலோசனைகளை வழங்கலாம்.  மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துவதுடன்,  நிலத்தடி நீரை அளவுக்கு மீறி உறிஞ்சுவதை தடுக்க வேண்டும்.  
    ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள்,  விவசாயிகள் பங்கேற்று நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்த ஆய்வின்போது,  புதுவை அரசின் பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம்,   மேற்பார்வைப் பொறியாளர் சத்தியமூர்த்தி,  செயற்பொறியாளர் கன்னியப்பம்,  நீரியல் நிபுணர் மனோகரன்,  சுற்றுச்சூழல் விஞ்ஞானி ரமேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai