Enable Javscript for better performance
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு நினைவேந்தல்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு நினைவேந்தல்

    By DIN  |   Published on : 25th June 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
       புதுவை மக்கள் அதிகாரம் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சார்பில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  திராவிடர் கழகம்,  பெரியார் சிந்தனையாளர் இயக்கம்,  தமிழர் வாழ்வுரிமைக் கட்சி,  தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடியில் போலீஸாரின் அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.  ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai