Enable Javscript for better performance
தேசிய படகுப் போட்டி: புதுவை வீரர்கள் வழியனுப்பிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய படகுப் போட்டி: புதுவை வீரர்கள் வழியனுப்பிவைப்பு

    By DIN  |   Published on : 25th June 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான படகு  ஓட்டும் போட்டியில் பங்கேற்கச் செல்லும் புதுவை வீரர்களுக்கு வழியனுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    அகில இந்திய அளவிலான டிராகன் போட்,  கனோபோலோ எனும் படகு  ஓட்டும் போட்டி, சண்டிகரில் ஜூன் 27 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதில் பங்கேற்க புதுவை அணித் தலைவர் ஜே.லோகேஸ்வரன் தலைமையில் வீரர்கள், புதுச்சேரியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டனர்.
    இவர்களை புதுவை மாநில ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் ஆர்.செல்வம்,   செயலாளர் எஸ்.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.  இந்த நிகழ்ச்சியில் மாநில கயாகின் மற்றும் கயோயிங் சங்க மூத்தத் துணைத் தலைவர் வி.சீத்தாராமன், மேலாளர் ஜெ.ஹரிபிரசாத்,  பயிற்சியாளர் எம்.முத்துவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai