Enable Javscript for better performance
நெல்லித்தோப்பில் திமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
    திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த தினத்தையொட்டி காமராஜர் சாலையில் சாரம் அவ்வைத் திடலில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்துக்கு  தொகுதிச் செயலாளர்  நடராஜன் தலைமை வகிக்தார். தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம்,  மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரங்கநாதன்,  மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில் திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா,  புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ.  ஆகியோர் பங்கேற்று 500 பேருக்கு வேட்டி,  புடவை,  சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப்பெட்டி,  ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
    கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன்,  முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, அவைத் தலைவர் சீத்தா. வேதநாயகம்,  மாநில கழக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார்,  பொருளாளர் சண். குமாரவேல்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் பேரவைத் தலைவர் பழநிராஜா,  முன்னாள் அமைச்சர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai