Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 22-இல் ஓவியப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவ,  மாணவிகளுக்கான ஓவியப் போட்டி வருகிற ஜூலை 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் 
    கோ.பாரதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் மூத்த தமிழறிஞருமான மன்னர்மன்னன் 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் செய்து வரும் பல்வேறுப் பணிகளை போற்றும் வகையில், "மன்னர் மன்னன் பொதுவாழ்க்கை புகழ் விழா' புதுச்சேரியில் விரைவில் நடைபெறவுள்ளது.  இதை முன்னிட்டு பள்ளி மாணவ,  மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஜூலை 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 முதல் பகல் ஒரு மணி வரை லாசுப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.
    "மன்னர் மன்னன் வாழ்வியல் வண்ணங்கள்' என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.  இதில், பங்கேற்க விரும்பும் மாணவ,  மாணவிகள் தங்களது பெயர்,  முகவரி,  கட்செவி அஞ்சல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கலைமாமணி கோ.பாரதி, பாரதிதாசன் அறக்கட்டளை,  எண்-4,  முதல் தெரு,  காந்திநகர்,  (வேலைவாய்ப்பகம் அருகில்), புதுச்சேரி-605009 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
    ஓவியம் வரையத் தேவையான அனைத்து உபகரணங்களையும் மாணவ,  மாணவிகளே எடுத்து வர வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.  சிறந்த 15 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.1,000 பரிசு வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய  9486748522 என்ற செல்லிடப்பேசியிலும்,  8667609521 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் கவிஞர் பாரதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai