Enable Javscript for better performance
புதுவை போலீஸார் கேரளத்தில் தாக்கப்பட்ட விடியோ வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    புதுவை போலீஸார் கேரளத்தில் தாக்கப்பட்ட விடியோ வெளியீடு

    By DIN  |   Published on : 25th June 2018 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை போலீஸார் கேரளத்தில் தாக்கப்பட்ட விடியோ வெளியாகியுள்ளது.
    புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் காகித உற்பத்தி நிறுவனம் நடத்தி வரும் வினித்ஜெலனிடம் கேரளத்தைச்  சேர்ந்த பினு,  அவரது சகோதரர்கள் சாஜூ,  வர்கீஸ் ஆகிய 3 பேர் ரூ.30 லட்சம் பொருள்களை வாங்கிக்கொண்டு,  அதற்கான பணத்தை அனுப்பவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸார் மோசடி வழக்கு பதிந்து பினுவைப் பிடிக்க மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் காவலர்கள் ராஜூ,  ராஜவேலு,  ஜெயகுமார்,  மூவரசன்,  ஓட்டுநர் சசீதரன் ஆகியோர் கடந்த ஜூன் 20-ஆம் தேதி காவல் வேனில் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் புத்தன்குரூஸ் பகுதிக்குச் சென்றனர். 
    அங்குள்ள ஒரு நிறுவனத்தில் இருந்த பினுவை காவலர்கள் பிடித்தபோது, அவரது ஆதரவாளர்கள் காவல் வேனை மறித்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தி பினுவை அழைத்துச் சென்றனர். 
    இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீஸார் பினு, அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான பினு உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
    இதனிடையே ,எர்ணாகுளத்தில் பினுவை பிடிக்கச் சென்றபோது, தாக்குதலுக்கு ஆளான போலீஸார் கேரளத்தில் இருந்து சனிக்கிழமை புதுச்சேரி திரும்பினர்.  இந்த நிலையில்,  எர்ணாகுளத்தில் புதுவை போலீஸார் தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய விடியோ வெளியாகியுள்ளது. அதில், வேன் ஓட்டுநரை பினு கூட்டாளிகள் தாக்குவது,  வானகத்தை எடுக்கவிடாமல் சுற்றி வளைத்து நிற்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.  இந்த விடியோ பதிவைக் கொண்டு கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai