Enable Javscript for better performance
ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சேர செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சேர செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 25th June 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை (ஆண் பாலர் மட்டும்) செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை (ஆண்கள் மட்டும்) செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  நுழைவுத் தேர்வு எழுதும் மாணவருக்கு 1.7.2019 அன்று பதினொன்றை வயதுக்குக் குறையாமலும் 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். அதாவது 2.7.2006-க்கு முன்னரும் 1.1.2008-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. 
    மாணவர்கள் 1.7.2019இல் இந்தக் கல்லூரியில் சேரும்போது, ஏழாம் வகுப்பு பயிலுபவராக அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.   1.12.2018 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆங்கிலத் தேர்வும், அன்று பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை கணிதத் தேர்வும் நடைபெறும்.  2.12.2018 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பொது அறிவுத் தேர்வு நடைபெறும் (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் எழுதலாம்) எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு 4.4.2019 அன்று நடைபெறும்.   நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மார்ச் மாதத் தொடக்கத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்படும்.  
    நேர்முகத் தேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்படும் மாணவர்கள்,  தேர்வு செய்யப்பட்ட ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவர். மேலும், மருத்துவச் சோதனை சேர்க்கையின் ஓர் அங்கமே தவிர, சேர்க்கையின் இறுதி கட்டம் அல்ல.
    தேர்வு மையம்: புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களுக்கு புதுச்சேரியில் மேற்குறித்த தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்.  தேர்வு மையம் குறித்த தகவல் மாணவர்களுக்கு இணை இயக்குநர் அலுவலகத் தேர்வுப் பிரிவில் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.   
    இதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் பெற்றிட, தெளிவான அஞ்சல் குறியீட்டு எண் உள்ள முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன் T​HE CO​M​M​A​N​D​A​NT, RA​S​H​T​H​I​YA IN​D​I​AN MI​L​I​T​A​RY CO​L​L​E​GE, DE​H​R​A​D​UN, DR​A​W​EE BR​A​N​CH, ST​A​TE BA​NK OF IN​D​IA, TEL BH​A​V​AN, DE​H​R​A​D​UN,(BA​NK CO​DE 01576), UT​T​A​R​K​H​A​ND 
    கிளையில் மாற்றத்தக்க, பொதுப்பிரிவினர்(ரூ.600-விரைவு அஞ்சல், அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555-விரைவு அஞ்சல்) தொகைக்கு கேட்பு வரைவோலையாகவோ ( A​c​c‌o‌u‌n‌t Pa‌y‌e‌e Ba‌n‌k D‌e‌m​a‌n‌d D‌r​a‌f‌t) A‌p​XÕ‌w‌w‌w.‌r‌i‌m​c.‌g‌o‌v.‌i‌n என்ற வலைதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்துச் சீட்டு  ( C‌h‌al‌l​a‌n) மூலமாகவோ அல்லது T​H​E C​O​M​M​A​N​D​A​NT, RA​S​H​T​R​I​YA IN​D​I​AN MI​L​I​T​A​RY CO​L​L​E​GE, DE​H​R​A​D​UN CO​N​T​O​N​M​E​NT, UT​T​A​R​A​N​C​HL 248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் இணை இயக்குநர், இரண்டாம் தளம், அ-அடுக்ககம் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி 605005 என்ற முகவரிக்கு 30.9.2018-க்குள் வந்து சேர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai