Enable Javscript for better performance
ஆடை வடிவமைப்பாளருக்கு பாலியல் தொந்தரவு: இரு இளைஞர்கள் போலீஸில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆடை வடிவமைப்பாளருக்கு பாலியல் தொந்தரவு: இரு இளைஞர்கள் போலீஸில் ஒப்படைப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் திரைப்பட ஆடை வடிவமைப்பாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 இளைஞர்களை இளம்பெண் ஒருவர் துணிச்சலுடன் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
     சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் அஸ்வினிதிரி (23). திரைப்படத் துறையில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.
     இவர், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஹேமத்குமாருடன் புதுச்சேரி வந்தார். இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில் நிலையம் முன் உள்ள கடையில் நின்று சூப் அருந்தினர்.
     அப்போது, இருவரையும் அவ்வழியே வந்த முருங்கப்பாக்கத்தில் உள்ள டைல்ஸ் கடையில் பணிபுரியும் சதீஷ், கிருஷ்ணகுமார், அமுது, தேவ் ஆகியோர் கேலி செய்தனராம். மேலும், அஸ்வினிதிரியின் ஆடையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தடுக்க வந்த ஹேமத்குமாரையும் தாக்கினராம். இதை அருகே உள்ள கடைகளில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ முன்வரவில்லை.
     அப்போது, அந்த வழியே சென்ற புதுச்சேரி இஞ்சானி மேஸ்திரி தெருவைச் சேர்ந்த அனிஷா பானு (20) என்ற இளம்பெண் துணிச்சலுடன் அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்டதுடன், அவர்களில் இருவரைப் பிடித்துக் கொண்டு ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீஸார், ரகளையில் ஈடுபட்ட சதீஷ், கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய அமுது, தேவ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai