Enable Javscript for better performance
ஜூலை 22-இல் மாநில அளவிலான திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை 22-இல் மாநில அளவிலான திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டிகள்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டிகள் புதுச்சேரியில் ஜூலை 22-ம் தேதி நடைபெறவுள்ளன.
     ஸ்ரீராம் இலக்கியக் கழகம் இதுபோன்ற போட்டிகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 19 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியை நடத்துகிறது.
     10 மையங்களில் போட்டிகள் நடத்தப்படும். புதுச்சேரியில் ஜூலை 22-ஆம் தேதி லாசுப்பேட்டை கருவடிகுப்பத்தில் அமைந்துள்ள ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறுகின்றன. புதுச்சேரி தவிர சென்னை, மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய நகரங்களிலும் முறையே வருகிற ஜூலை 21, 28, 29 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 11, 12, 18, 19 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும்.
     இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளிலோ அல்லது ஸ்ரீராம் சிட்ஸ் எண்: 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை - 600 004 (தொலைபேசி: 044 - 4021 4100) என்ற முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜலை 17-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
     இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இடைநிலைப் பிரிவில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியரும், மேல்நிலைப் பிரிவில் 9,10,11,12- ஆம் வகுப்பு மாணவ, மாணவியரும், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ, மாணவியரும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
     பேச்சுப் போட்டிக்கான
     தலைப்பு: இடைநிலைப் பிரிவு மாணவர்கள் "சொல்லுக சொல்லின் பயனுடைய' (குறள் எண்: 200) அல்லது "சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்' (குறள் எண் 311) அல்லது 'சொல்லின்கண் சோர்வு' (குறள் எண் 642) அல்லது "யாம் என்னும் செருக்கு' (குறள் எண் 844) என்ற ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டி நடைபெறும்.
     மேல்நிலைப் பிரிவு மாணவர்கள் "நீர்இன்றி அமையாது உலகு' (20) அல்லது "யாவுள முன்னிற் பவை' (636) அல்லது "பத்தடுத்த கோடி உறும்' (817) அல்லது "நஞ்சுண்பார் கள்உண் பவர்' (926) என்ற ஏதேனும் ஒரு தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் "இந்திரனே சாலும் கரி' (25) அல்லது "பருவத்தோடு ஓட்ட ஒழுகல்' (482) அல்லது "துன்பம் உறவரினும் செய்க' (669) அல்லது "நிலம்என்னும் நல்லாள் நகும்' (1040) என்ற ஏதேனும் ஒரு தலைப்பிலும் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.
     ஓவியப் போட்டிக்கான
     தலைப்பு: இடைநிலைப் பிரிவு மாணவர்கள் "சிறைகாக்கும் காப்பு' (குறள் எண்: 57) அல்லது "அடுத்தது காட்டும் பளிங்கு போல்' (706) அல்லது "செய்க பொருளை' (759) அல்லது "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' (1031) என்ற ஏதேனும் ஒரு தலைப்பிலும், மேல்நிலைப் பிரிவு மாணவர்கள் "ஞாலத்தின் மாணப் பெரிது' (102) அல்லது 'உள்அழிக்கல் ஆகா அரண்' (421) அல்லது "யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' (772) அல்லது "குன்றின் அணையாரும் குன்றுவர்' (965) என்ற ஏதேனும் ஒரு தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் "குணம் என்னும் குன்றேறி நின்றார்' (29) அல்லது "இணர்ஊழ்த்தும் நாறா மலர்' (650) அல்லது "உடுக்கை இழந்தவன் கைபோல' (788) அல்லது "சொல்ஏர் உழவர் பகை' (872) என்ற ஏதேனும் ஒரு தலைப்பிலும் ஒரு மணி நேரம் வரையலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai