Enable Javscript for better performance
பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி பரிசு வழங்கினார்.
     புதுச்சேரியில் 2008 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் என்னும் தொண்டு நிறுவனத்தில் தற்போது 210 குழந்தைகள் கல்வி உதவியை குடும்ப சூழ்நிலையில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஹெர்மள் மைனரின் 99-ஆவது பிறந்த நாள் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
     இதில் கூட்டுறவு மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமத்தில் கடந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai