Enable Javscript for better performance
பொதுப்பணித் துறை அலுவலகம் முன் ஊழியர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    பொதுப்பணித் துறை அலுவலகம் முன் ஊழியர்கள் தர்னா

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் அரசுப் பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஆயிரத்து 311 தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் 16 நாள்கள் வேலையை 30 நாள்களாக உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை முழுநேர தினக் கூலி ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
     அரசு பணியாளர் நல கூட்டமைப்புத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், குமரராஜ், அசோக்குமார், தேவநாதன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai