Enable Javscript for better performance
மணக்குள விநாயகர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா- Dinamani

சுடச்சுட

    

    மணக்குள விநாயகர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா அண்மையில் நடைபெற்றது.
     கல்லூரி நிர்வாக இயக்குநர் தனசேகரன், துணைத் தலைவர், சுகுமாரன் எம்.எல்.ஏ., செயலர் ஓ.நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.
     சிறப்பு விருந்தினராக இந்திய இளையோர் விடுதிகள் சங்கத் தலைவர் இ.எம்.ராஜன் பங்கேற்றார். "உயிர் மூச்சும் உளவெளியும்' என்ற தலைப்பில் பிரபஞ்ச நிகழ்வுகளையும் மனித உடல் நிகழ்வுகளையும் எளிமையாக தொடர்புபடுத்தி அவர்கள் விளக்கினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயபிரசாத் நன்றி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai