Enable Javscript for better performance
ஹயக்ரீவர் கோயிலில் இன்று பவித்ர உற்சவம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஹயக்ரீவர் கோயிலில் இன்று பவித்ர உற்சவம் தொடக்கம்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th June 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பவித்ர உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
     பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை காலை மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
     இதைத் தொடர்ந்து, தினமும் மூலவருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் விசேஷ அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்பட உள்ளன. ஜூலை 1ஆம் தேதி காலை கருடசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai