Enable Javscript for better performance
அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி பேரணி

    By  புதுச்சேரி  |   Published on : 27th June 2018 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பேரவையை நோக்கி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் தொடங்கிய இந்தப் பேரணிக்கு ஏஐடியூசி தலைவர் வி.எஸ்.அபிஷேகம் தலைமை வகித்தார். செயல் தலைவர் நாரா.கலைநாதன், பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     ஏஎப்டி பஞ்சாலையை திறந்து முழுமையாக இயக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வுக் கால பலன்களை அளிக்க வேண்டும், மணல் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர் சட்டத்தை திரும்பப் பெற்று சமூக பாதுகாப்புப் பணி பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கிகளை வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
     ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் மற்றும் இதர மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும், தனியார் தொழிற்சாலைகளில் ஏற்படும் தொழில் தாவாவை விரைந்து தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடைபெற்றது.
     பேரணியில் ஏஐடியுசி நிர்வாகிகள் சேது செல்வம், ஜெயபாலன், சந்திரசேகரன், முருகன், துரை செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     பேரணி சட்டப்பேரவை அருகில் நிறைவு பெற்றது. பின்னர் நிர்வாகிகள் அபிஷேகம் தலைமையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினர்.
     அப்போது அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பாக விஜயன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துகளை அறிந்து அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், மணல் எடுக்க அனுமதிக்கவும் முயற்சித்து வருவதாகவும் ஏஐடியூசி தலைவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai