Enable Javscript for better performance
உள்ளாட்சி வரி பாக்கிதாரர்கள் பட்டியலை ஊடகங்களில் வெளியிட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சி வரி பாக்கிதாரர்கள் பட்டியலை ஊடகங்களில் வெளியிட உத்தரவு

    By  புதுச்சேரி  |   Published on : 27th June 2018 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரி பாக்கி வைத்திருப்போர்களின் பட்டியலை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று புதுவை உள்ளாட்சி நிர்வாக அரசு செயலர் பி.ஜவஹர் உத்தரவிட்டார் .
     இது குறித்து அவர், உள்ளாட்சி நிர்வாக இயக்குநர் ஜி.மலர்கண்ணனுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
     புதுவையில் உள்ள உள்ளாட்சிகளில் நிலுவை சொத்து வரி, உரிம கட்டணம், நகராட்சி கட்டணம், கேபிள் டிவிக்கான கேளிக்கை வரி உள்ளிட்ட இனங்களில் பெரிய தொகை நீண்ட காலமாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால், உள்ளாட்சிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனால், உள்ளாட்சிகளால் அந்தந்த ஆண்டுக்குரி வரி இலக்கை அடைய முடியில்லை. இதன் தொடர்ச்சியாக நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்களில் ஊழியர்களுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக வழங்க முடியவில்லை. எனவே, நிலுவை வரிபாக்கியை திட்டமிட்டு விரைவாக வசூலிக்க வேண்டும்.
     வரி பாக்கிதாரர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் சொத்து முடக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம். நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் நிலுவை வரி பாக்கிதாரர்களின் பட்டியலுடன் உள்ளாட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு ஜூலை 2-ஆம் தேதிக்குள் வர வேண்டும்.
     நிலுவை வரி பாக்கிதாரர்களின் பட்டியலை தொகுத்து பிரதான ஊடகங்களில் உள்ளாட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் வரி பாக்கிதாரர்களின் சொத்துக்களை முடக்க உள்ளாட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஜவஹர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai