Enable Javscript for better performance
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: 37 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்க பிம்ஸ் கல்லூரிக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: 37 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்க பிம்ஸ் கல்லூரிக்கு உத்தரவு

    By  புதுச்சேரி  |   Published on : 27th June 2018 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் (பிம்ஸ்) எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது 37 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
     இது குறித்து புதுவை அரசின் சுகாதாரத் துறைச் செயலர் எம்.சாரதி, புதுச்சேரி மருத்துவக் கல்லூரித் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
     2018-19-ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்க இயலாது என தங்களது கல்லூரி சார்பில் புதுவை அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
     இந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டன.
     இதன்படி, புதுச்சேரி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக தங்களது கல்லூரியில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 36, 37 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்க இயலாது என்ற தங்களது கல்லூரியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
     எனவே, தங்களது கல்லூரியில் 37 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்டாக் மூலம் விரைவில் நடைபெறும். சென்டாக் கலந்தாய்வு மூலம் தங்களது கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறும் மாணவர்களை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai