Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கு: என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரின் பிணை மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கு: என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரின் பிணை மனு தள்ளுபடி

    By  புதுச்சேரி,  |   Published on : 27th June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யாவின் பிணை மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
     புதுவை, தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணைநூதன முறையில் திருடி அதைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதுவை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய எதிரியான சந்துருஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.
     இந்த நிலையில், புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருக்கும் சத்யா, தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணசாமி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சத்யாவுக்கு பிணை வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சத்யாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணசாமி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai