Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 27th June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
     திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஜூலை 15-ஆம் தேதி தலைமைக் கழகப் பேச்சாளர் லியோனியை வரவழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும், நல உதவிகள் வழங்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் திமுக சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
     திமுக தெற்கு துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : உப்பளத்தில் உள்ள கள்ள சாராயக் கடைகளை அகற்ற காவல்துறையும், கலால் துறையும் மக்கள் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். ஏ.டி.எம். பண மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். மழைக் காலத்தை முன்னிட்டு உப்பளம் தொகுதியில் தூர்ந்துள்ள கால்வாயை சுத்தம் செய்ய வலியுறுத்துவது, உயர்த்தபட்ட வரிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     இதில் தொகுதிச் செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெயராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சந்திரன், ஆதிதிராவிடர் நலக் குழு மாநில துணை அமைப்பாளர் மூக்கன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தொகுதி மாநில பிரநிதிநிதிஜெயராமன், காத்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai