Enable Javscript for better performance
குடிமைப்பொருள் துறை அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரி குடிமைப்பொருள்கள் துறை அலுவலகம் முன் நியாய விலைக் கடை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பணியாற்றி வரும் 600 நியாய விலைக்கடை ஊழியர்கள் 16 மாத கால ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலுவை ஊதியம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமியுடன் ஊழியர்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்க மறுத்தனர்.
     இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநரும், கூட்டுறவுத் துறை இயக்குநரும் கடந்த ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஊதியம் தருவதாக எழுதிக் கொடுத்தனர். இதன் பிறகே போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்று இலவச அரிசியை வழங்கினர். ஆனால் ஜூன் 15-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படவில்லை. 2 நாள்கள் காத்திருந்தனர்.
     அப்போதும் ஊதியம் கிடைக்காதாதல் கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தட்டாஞ்சாவடியில் உள்ள தலைமை குடிமைப்பொருள் நுகர்வோர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai