Enable Javscript for better performance
பாகூர் மூலநாதர் கோயில் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பாகூர் மூலநாதர் கோயில் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

    By  புதுச்சேரி  |   Published on : 27th June 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலம் பாகூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூலநாதர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து தொடக்கிவைத்தனர்.
     பாகூரில் 1,400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 18-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் நடைபெற்றது.
     துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கிவைத்தனர். விழாவில் பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேல் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
     தேரோட்டத்தை யொட்டி, பாகூர், ஆதிங்கப்பட்டு, கன்னியக்கோவில், குடியிருப்புபாளையம், சேலியமேடு, அரங்கனூர், கீழ்பரிக்கல்பட்டு, குருவிநத்தம் பகுதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai