Enable Javscript for better performance
போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தையொட்டி, புதுச்சேரியில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     போதை எதிர்ப்பு தினம் ஆண்டு தோறும் ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
     கம்பன் கலையரங்கம் அருகே பேரணியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
     பேரணியில் பல்வேறு செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மது உடலைக் கெடுக்கும், பான் மசாலா புற்றுநோயை உண்டாக்கும், போதை மருந்துகள் உயிரை குடிக்கும், கஞ்சா பைத்தியமாக்கும் என்ற போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கம்பன் கலையரங்கில் தொடங்கிய பேரணி அண்ணா சாலை, காமராஜர் சாலை, லெனின் வீதி, மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai