Enable Javscript for better performance
மலேசியாவில் மாயமான புதுவை தொழிலாளி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மலேசியாவில் மாயமான புதுவை தொழிலாளி மீட்கப்பட்டுள்ளதாக புதுவை சட்டம்-ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா தெரிவித்தார்.
     இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி: புதுவை மாநிலம் அரியூரைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி இந்துராணி. மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற தன்னுடைய கணவரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் மனுவை புதுவை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடுத்திருந்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக உதவியுடன், காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ் விசாரணை நடத்தினார்.
     இதையடுத்து கலியபெருமாள் மலேசியாவில் பணியாற்றும் இடம், அதன் தொலைபேசி எண்ணையும் காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ் அறிந்து கொண்டார்.
     பின்னர், கலியபெருமாளை வேலைக்கு அமர்த்திய முகவர் உதவியுடன் அவரைத் தொடர்பு கொண்டும் பேசினார். அப்போது கலியபெருமாள் நல்ல முறையில் பணியாற்றி வருவதாகவும், செப்டம்பர் மாதம் மகள் திருமணத்துக்காக இந்தியா வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகவல் இந்துராணியிடம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்துராணியும் அவர் கணவரோடு தொலைபேசியில் பேச காவல்துறை உதவி செய்தது.
     இதற்காக இந்துராணி காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார் அபூர்வா குப்தா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai