Enable Javscript for better performance
முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th June 2018 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் புனர்வாழ்வு நிவாரண உதவித்தொகை பெற செப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று முன்னாள் படை வீரர்கள் நலத்துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயணன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
     இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுச்சேரி முப்படை நலத்துறை மூலம் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களின் புனர்வாழ்வு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் காசோலை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்.14ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள், அடையாள அட்டையுடன் முப்படை நலத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
     காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள், அந்தந்த மாவட்ட அதிகாரியின் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
     இதுவரை தையல் இயந்திரமோ அல்லது அதற்கு இணையான பணம் ரூ.5 ஆயிரம் காசோலையோ, இதற்கு முன் பெற்ற விதவையர்களுக்கு இந்தச் செய்தி பொருந்தாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், முன்னாள் படை வீரர்கள் நலத் துறையில் செப்.28-ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai