Enable Javscript for better performance
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் விக்டோரியா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி ( 77). சுதேசி பஞ்சாலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திங்கள்கிழமை பெரிய மார்க்கெட் சென்றுவிட்டு செஞ்சி சாலை வழியாக பழைய அரசு மகப்பேறு மருத்துவமனை வழியாக சென்றுகொண்டிருந்தார்.
     அப்போது அங்கு நின்றிருந்த 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் ஜெயலட்சுமியிடம் திருடர்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் இப்படி தங்கச் சங்கிலியை அணிந்து வரலாமா என கேட்டுள்ளனனர். மேலும் அதை கழற்றி உங்கள் பையில் வையுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
     இதனை நம்பிய ஜெயலட்சுமி நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை கழற்றியுள்ளார். வயதானதால் அவர் பையில் சங்கிலியை வைக்க தடுமாறியுள்ளார். உடனே அந்த நபர்கள், ஒரு காகிதத்தை எடுத்து கொடுக்கும்படியும், அதில் தாங்கள் அந்த காகிதத்தில் வைத்து மடித்து பையில் வைக்கிறோம் என கூறியுள்ளனர்.
     அவர்களை நம்பி தங்கச் சங்கிலியை மூதாட்டி ஜெயலட்சுமி கொடுத்துள்ளார். அவர்களும் காகிதத்தில் மடித்து பையில் வைத்தனர். வீட்டுக்குச் சென்றதும் ஜெயலட்சுமி பையை பார்த்தபோது அதில் கல் இருந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயலட்சுமி இதுகுறித்து பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai