Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
     அந்தப் பள்ளியின் பழைய மாணவரும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான ந. தனஞ்செயன், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். லட்சுமி அறக்கட்டளை எனும் தன்னுடைய தாயார் பெயரிலான அறக்கட்டளை மூலம் 20 மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சியில் ந. தனஞ்செயனுடன் முன்னாள் எம்எல்ஏ மா.இளங்கோ, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.
     புதுச்சேரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், அந்தக் கல்லூரியில் சட்டம் பயிலும் சிறந்த மாணவர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தனது அறக்கட்டளை சார்பில் தங்கப்பதக்கம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai