Enable Javscript for better performance
ஜிப்மரை முற்றுகையிட்ட பொதுநல அமைப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மரில் வெளி மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணி வழங்குவதைக் கண்டித்து, பொதுநல அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுச்சேரி கோரிமேடு மற்றும் காரைக்காலில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை கல்லூரி உள்ளது.
     ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 2018-19-ஆம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கையில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைப்பதாகக் கூறியும், ஜிப்மர் மருத்துவமனையில் எழுத்தர், செவிலியர் பணிகளை வெளி மாநிலத்தவர்களை அமர்த்தியதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஜிப்மர் வளாகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவப் படிப்புக்காக போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஜிப்மர் வளாகம் முன் சமூக அமைப்பினர் முற்றுகையிட்டதால் புதுச்சேரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கோரிமேடு போலீஸார் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai