Enable Javscript for better performance
ஜூலை 2-இல் திமுக மகளிரணி கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் திமுக மகளிரணி சார்பில் ஜூலை 2-இல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
     கருத்தரங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநில மகளிரணி அமைப்பாளர் சுசீலா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கட்சியின் தலைமை நிர்வாகிகள் குமரி விஜயகுமார், கவிஞர் சல்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளுக்கு கருத்தரங்கை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது:
     திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி பிரசாரக் குழு சார்பில் திமுக மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. தலைமையில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஜூலை 2-ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெறுகிறது.
     கருத்தரங்கில் புதுவை முதல்வர் வே. நாராயணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர் என்றார் சிவா எம்.எல்.ஏ.
     கூட்டத்தில், மாநில கழக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருட்செல்வி, டாக்டர் மாயக்கிருஷ்ணன், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நல்குணா, அல்போன்ஸ் மேரி, சந்திரலேகா, தேன்மொழி, புஷ்பலதா, சூர்யா, மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் மணிதேவி, சித்ரா, ஜான்சிராணி, சரளா, கல்பணா, நர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai