Enable Javscript for better performance
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By  புதுச்சேரி,  |   Published on : 28th June 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அறிவியல் இயக்கம், தன்னம்பிக்கை கலைக் குழு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து
     சிறுவர், சிறுமிகளை பாலியல் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது குறித்து, பொம்மலாட்ட செயல்பாடுகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     அபிஷேகப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற்றார். தலைமை ஆசிரியை (நிலை 2) பாக்கியலட்சுமி தலைமை வகித்தார்.
     அறிவியல் இயக்கச் செயலர் அருண் நாகலிங்கம் நோக்க உரையாற்றினார். தனியார் அமைப்புத் தலைவர் விமலா மற்றும் சரண்யா ஆகியோர் கெட்ட தொடுதல் பற்றி அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.
     ஆசிரியர் பத்மநாபன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
     நிகழ்ச்சியில் குழந்தைகள், பெற்றோர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக பொம்மலாட்ட செயல்பாடுகள் மூலம் செயல்பாட்டாளர் எலிசபெத் ராணி, இசை ஆகியோர் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai