Enable Javscript for better performance
வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி மோசடி- Dinamani

சுடச்சுட

    

    வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி மோசடி

    By  புதுச்சேரி  |   Published on : 28th June 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி நகைளை அடமானம் வைத்து ரூ.ஒரு கோடி மோசடி செய்தது தொடர்பாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     புதுச்சேரி நேரு வீதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர். அவ்வாறு அடகு வைக்கப்பட்ட நகைகள் சரியாக இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
     அப்போது, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி கடந்த 7.3.2007 முதல் நடந்துள்ளது.
     இது குறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் பவன்குமார் புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
     அதன் பேரில், கரிக்கலாம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் அய்யப்பன், அவரது நண்பர் குருமாம்பேட் பாலமுரளி கிருஷ்ணன், நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் சாரம் வெண்ணடிலா நகர் சுரேஷ்குமார் மனைவி ரத்னாம்பாள், ராதாபுரம் ஜெயச்சந்திரன் மனைவி சித்ரா, வில்லியனூர் ஜெயஸ்ரீ, கோர்க்காடு தினேஷ்குமார், முகவர் முனுசாமி, முத்தியால்பேட்டை ஜெயச்சந்திரன் மனைவி பிரியங்கா, ராகவேந்திரா நகர் ராஜா, கோபாலன் கடை காசிநாதன் ஆகிய 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் வங்கியின் மதிப்பீட்டாளர் அய்யப்பன் போலி நகைகளை பெற்றுக்கொண்டு அசல் நகை என்று சான்றளித்து, அதன் மூலம் சுமார் ரூ.ஒரு கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     வங்கி ஊழியர்களுக்கும், மோசடிக்கும் தொடர்பு இருக்கிறா? வாடிக்கையாளர்கள் உண்மையான நகைககள் வைத்து அவற்றை மாற்றிவிட்டு போலி நகைகளை வைத்தார்களா? அல்லது வாடிக்கையாளர்களே போலி நகைகளை அடமானம் வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai