Enable Javscript for better performance
அரசு ஊழியர்கள் பதவிக்கு மதிப்பு அளித்தால் வாழ்வில் புண்ணியம் கிடைக்கும்: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியர்கள் பதவிக்கு மதிப்பு அளித்தால் வாழ்வில் புண்ணியம் கிடைக்கும்: கிரண் பேடி

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kiranbedi

    அரசு ஊழியர்கள் தங்களது பதவிக்கு மதிப்பு அளித்து நடந்து கொண்டால், வாழ்க்கை முழுவதும் புண்ணியம் கிடைக்கும் என்று புதுவை பிரதேச துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
     இதுதொடர்பாக தனது கட்செவி அஞ்சலில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட பதிவு:
     பொது சேவை என்பது மக்களுக்கு சேவை செய்வதாகும். மாறாக, மக்கள் பணத்தை எடுத்துக் கொள்வதல்ல. பொது சேவையில் இருப்பவர்கள் ஒவ்வொரு தருணமும் மற்றவர்களின் தேவை, நலனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அனைத்து முடிவுகளும் பெரும்பான்மை மக்களின் நலனுக்காக எடுக்கப்பட வேண்டும்.
     அலுவலகத்தில் இருந்து பணியாற்றினாலும், களத்துக்குச் சென்று பணியாற்றினாலும் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவதற்கான முடிவுகளுக்கு அவர்களே பொறுப்பாகின்றனர்.
     மற்றவர்களின் துன்பங்களைத் தீர்க்கப் பாடுபடும் அதிகாரிகள் தனித்துவமான நிலையில் உள்ளனர். சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம் கோடி கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலன் பெறுகின்றனர்.
     நல்ல மருத்துவப் பராமரிப்பு, நல் ஆசிரியர்கள், நீர்வளம், சுகாதாரம், சட்டம் -ஒழுங்கு, நிதி நிர்வாகத்தில் நேர்மை, நல்ல கொள்கைகள் இவை மட்டுமன்றி, சுயநலன் சார்ந்த முடிவுகளை மறுப்பது போன்றவையே நல்ல நிர்வாகத்துக்கு அழகாகும்.
     அரசு அதிகாரிகள் தங்களது பதவிக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
     மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் புண்ணியம் வாழ்க்கை முழுவதும் கிடைக்கும் என தனது கட்செவி அஞ்சலில் ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai