Enable Javscript for better performance
சட்டப்பேரவையைச் சுற்றி ஜூலை 2 முதல் 144 தடை உத்தரவு அமல்- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவையைச் சுற்றி ஜூலை 2 முதல் 144 தடை உத்தரவு அமல்

    By  புதுச்சேரி  |   Published on : 29th June 2018 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவையைச் சுற்றி ஜூலை 2 முதல் 20 நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.
     புதுவையில் 2018 -19 ஆம் நிதி ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரத்து 530 கோடியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டது. இதனிடையே, நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக கடந்த ஜூன் 4 -ஆம் சட்டப்பேரவை கூட்டப்பட்டது.
     ஆனால், நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், கடந்த ஜூன் 5-ஆம் தேதி பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தரும்படி வலியுறுத்தினார்.
     இதையடுத்து, புதுவை அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்தது.
     புதுவை மாநிலத்துக்கான 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 2-ஆம் தேதி தொடங்கும் என்றும், அன்றைய தினம் நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்றும் என புதுவை சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்தார்.
     இதையொட்டி, ஜூலை 2-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை கிழக்குக் காவல் சரகத்தில் (அதாவது புதுவை பேரவையைச் சுற்றியுள்ள இடம்) ஊர்வலம், பொதுக்கூட்டம், போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது என சட்டம் -ஒழுங்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா தெரிவித்தார்.
     இதுதொடர்பாக புதன்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
     புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் காவல் துறை சட்டம் 1861-இன் கீழ், பிரிவு 30 (2) வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, கிழக்குக் காவல் சரகத்துக்கு உள்பட்ட காவல் நிலையப் பகுதிகளில் ஜூலை 2-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 20 நாள்கள் எந்த ஒரு நபரோ, குழுவாகவோ கூடவோ, ஊர்வலமோ, பொதுக்கூட்டமோ நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
     மேலும் ஊர்வலமோ, போராட்டமோ நடத்துவோர் அதற்கான நிபந்தனைகளின்படி, 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு திருமணங்கள், மத விழாக்கள், இறுதிச் சடங்கு ஊர்வலம், அரசு விழாக்களுக்கு பொருந்தாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai