Enable Javscript for better performance
நீர் நிரம்பிய பாத்திரத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    நீர் நிரம்பிய பாத்திரத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை சாவு

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீர் நிரம்பிய பாத்திரத்தில் விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
     புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி அனுஸ்ரீ. தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஸ்ரீவர்ஷன். குழந்தையின் தந்தையும் தாயும் வியாழக்கிழமை வெளியே சென்றிருந்த நிலையில், குழந்தையை உறவினர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
     அப்போது, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கு தண்ணீர் நிரப்பிவைக்கப்பட்ட பெரிய பாத்திரத்தில் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.
     உடனடியாகக் குழந்தையை மீட்டு, கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது.
     இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai