Enable Javscript for better performance
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் மணல் கடத்திய லாரியை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     புதுச்சேரி துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர், பாரதி பஞ்சாலை அருகே மணல் ஏற்றி வந்த லாரியை மறித்து விசாரணை நடத்தினர்.
     விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான லாரி என்பதும், அதில் திருட்டுத் தனமாக மணலை ஏற்றி வந்து, அதே பகுதியில் உள்ள இடத்தில் கொட்டி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
     மணல் கொட்டப்பட்ட இடத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த லாரியின் உரிமையாளர் கணேசன், லாரி ஓட்டுநர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து லாரியையும், ரூ. 2 லட்சம் மதிப்பிலான மணலையும் வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai