Enable Javscript for better performance
மீன் வளர்ப்போர் முகமை சார்பில் பயிற்சி சுற்றுலா- Dinamani

சுடச்சுட

    

    மீன் வளர்ப்போர் முகமை சார்பில் பயிற்சி சுற்றுலா

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில், 19 பேர் பயிற்சி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
     புதுச்சேரி மாவட்டத்தில் தற்போது நன்னீர் மீன் வளர்ப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மீன் குஞ்சுகள் உற்பத்தி, வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அந்தத் துறைச் செயலர் பார்த்திபன் அறிவுறுத்தலின்படி, பயிற்சி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
     அதன்படி, ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம், பவானி சாகரிலுள்ள தமிழ்நாடு அரசு மீன் வளத் துறையின் மீன் உற்பத்தி, வளர்ப்பு பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் ஆகிய இடங்களுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நடைபெறும் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கப்பட்டன.
     இந்த 2 நாள்கள் களப் பயணத்தில் பல்வேறு தொழில்நுட்ப விவரங்களை மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறிந்து கொண்டனர். இந்தப் பயிற்சி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் முதன்மைச் செயலாக்க அதிகாரி ராஜேந்திரன் தலைமையில், மீன்வள விரிவாக்க அதிகாரி ஆறுமுகம் செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai