Enable Javscript for better performance
வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி மாமூல் கேட்ட 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி மாமூல் கேட்ட 2 பேர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கோரிமேட்டில் கத்தி முனையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     புதுச்சேரி சொக்கநாதன்பேட் தட்சிணாமூர்த்தி நகரில் வசிப்பவர் கேசவன் (35). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 26}ஆம் தேதி கடையில் இருந்தபோது அங்கு வந்த 3 இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரபல தாதாவின் கூட்டாளிகள் என்று கூறி, மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் மாமூல் தரவேண்டும் எனக் கேட்டு மிரட்டினராம்.
     மாமூல் தர கேசவன் மறுக்கவே, அவரைக் கத்தி முனையில் ரெளடி கும்பல் மிரட்டியுள்ளது.
     அப்போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீஸார் கேசவன் கடை அருகே வந்தபோது போலீஸாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள்
     கத்திகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
     இதையடுத்து, 2 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
     விசாரணையில், சொக்கநாதன்பேட் அணைக்கரை வீதியைச் சேர்ந்த தமிழ்மணி (24), ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி (23) என்பதும், வியாபாரி கேசவனிடம் மாமூல் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது.
     போலீஸார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai