Enable Javscript for better performance
வில்லியனூர் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வில்லியனூர் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 29th June 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலம், வில்லியனூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தார்.
     கோயில் நகரம் என்று அழைக்கப்படும் வில்லியனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தென்கலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில். இந்தக் கோயிலின் 14}ஆம் ஆண்டு பிரமோற்சவம் ஜூன் 19}ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகளும், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
     தொடர்ந்து, வியாழக்கிழமை பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் குதிரை வாகனத்தில் வீதி உலா புறப்பாடும், வேடுபரி உற்சவமும் நடைபெற்றன. முக்கிய விழாவான திருத்தேர் உற்சவம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
     விழாவில் முதல்வர் நாராயணசாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமாறன், இந்து சமய அறநிலையத் துறை இயக்குநர் தில்லைவேல் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
     தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai