Enable Javscript for better performance
ஏஎப்டி பஞ்சாலை தொழிலாளர்கள் பிரச்னை: பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஏஎப்டி பஞ்சாலை தொழிலாளர்கள் பிரச்னை: பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக முடிவு

    By DIN  |   Published on : 30th June 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை தொழிலாளர்கள் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என்று முதலியார்பேட்டை சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கர் உறுதியளித்தார்.
    புதுவை அனைத்து தொழிற்சங்க நடவடிக்கை குழுத் தலைவர் வீரமுத்து, செயலர் சின்னதுரை, தொழிற்சங்க நிர்வாகிகள் முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கரை வெள்ளிக்கிழமை சந்தித்து, ஆலைக்கு அழைத்துச் சென்று பேசினர்.
    அப்போது, 2011-ஆம் ஆண்டு தானே புயல் தாக்குதலுக்குப் பின்னர் இதுவரை ஆலை இயக்கப்படாததால், தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை என தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ. 102.49 கோடி நிலுவையில் உள்ளது. 
    அதுபோல, பணி ஓய்வு பெற்ற 990 பேருக்கு வழங்க வேண்டிய ஓய்வுத் தொகை உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையைப் பெறாமலேயே 900 பேர் இறந்துவிட்டனர்.
    இவர்களில் 6 பேர் நிலுவைத் தொகை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். 
    தற்போது பணிக் காலத்தில் உள்ள 750 பேரில் 100 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. மீதியுள்ள 650 பேருக்கு லே- ஆப் ஊதியம்தான் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனர். மேலும், ஆலையில் உள்ள பழைய இரும்பு பொருள்களை விற்றாலே ரூ. 10 கோடி நிதி கிடைக்கும், அதைக் கொண்டு தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையில் 20 சதவீதத்தை வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
    தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்ட பின்னர் பாஸ்கர் எம்.எல்.ஏ. இது குறித்து சட்டப்பேரவையில் பேசுவதாகவும், தொழிலாளர்களுக்கான பலன்கள் கிடைக்கச் செய்ய உறுதியான 
    நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai