Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கு: எதிரிகளின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கு: எதிரிகளின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 30th June 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள எதிரிகள் 6 பேரின் பிணை மனு மீதான விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
    புதுவையில் போலி ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதுவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்த வழக்கில் புதுச்சேரியில் கணினி மையம் நடத்தி வந்த பாலாஜி, ஜெயச்சந்திரன் ஆகியோரை போலீஸார் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கிம்மர், ஸ்வைப் இயந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
    மேலும், அவர்கள் அளித்த தகவலின்பேரில், கடலூரைச் சேர்ந்த கமல், சென்னையைச் சேர்ந்த ஷ்யாம், புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்த தற்காலிக மருத்துவர் விவேக், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோர், முக்கிய எதிரிகளுக்கு உதவியதாக சிவக்குமார், கணேஷ், டேனியல், சந்துருஜியின் மூளையாகச் செயல்பட்ட திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த பீட்டர், கோவையைச் சேர்ந்த தினேஷ், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இர்பான் ரஹ்மான் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
    அவர்களிடம் இருந்து ஸ்வைப்பிங் இயந்திரம், பல லட்ச ரூபாய் ரொக்கம், சொகுசு கார், மடிக் கணினி, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
    அதுபோல, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்துருஜியின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 
    இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி, புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
    கடந்த 2 நாள்களுக்கு முன்னர் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யாவின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    இந்த நிலையில், சிறையில் உள்ள கணேசன், டேனியல் சுந்தர்சிங், சிவகுமார், அப்துல் சமது, மணிசந்தர், சுதாகர் ஆகிய 6 பேர் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி, புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai